2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (02.02.2014 – 08.02.2014)

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (02.02.2014 – 08.02.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு பண வரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். சரியான சந்தர்ப்பத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்புடன் பழகி  மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் .கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். வார இறுதியில் உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் அவதிப்பட வேண்டி இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் தேவை.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மிகவும் இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். பெண்களுக்கு ஆதரவுகள் கிடைக்கப்பெறும். முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். உடல் நலக்குறைவு இருந்தாலும் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும். பிள்ளைகள் மூலம் பெற்றவர்களுக்கு பெருமை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். திருமண நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிகரமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். இவ்வாறாக இந்தவாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கடுமையான உழைப்பும் களைப்பில்லாத மனமும் பெற்ற மிதுன ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் உங்களுக்கு நன்மையாகவே அமையும். எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
 
அதிர்ஷ்ட திகதி : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம். வீணான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து நீங்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவார்கள். செலவுகள் கூடுதலாக இருக்கும், சிக்கனம் தேவை. ஆனாலும் வார இறுதியில் சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் - ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னேறுவர். தீய நட்பினால் தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் முயற்சிகள் தடைப்படும். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
 
அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 02ஆம் திகதி காலை 12.13 மணியிலிருந்து பெப்ரவரி 04ஆம் திகதி மாலை 1.59 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும். உடலில் காயங்கள் உண்டாகும். பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பாராத நஷ்டங்களை தவிர்க்கலாம். குடும்ப செலவுகள் அதிகமாக காணப்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறாக இந்தவாரம் முழுவதும் கெடுதலான பலன்களே காணப்படுகின்றன. எனவே கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 02
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 04ஆம் திகதி மாலை 1.59 மணியிலிருந்து பெப்ரவரி 06ஆம் திகதி மாலை 8.36 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள். 
 
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் வார இறுதியில் தேவையில்லாத பயங்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும். மாணவர்கள் நண்பர்களுடன் வீண் பொழுது போக்குவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலம் பாதிப்படையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 06ஆம் திகதி மாலை 08.36 மணியிலிருந்து பெப்ரவரி 09ஆம் திகதி காலை 6.55 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மன தைரியமும் மிகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் வருமானத்தை அதிகரிக்கலாம். குடும்பத்தில் அன்பு மேலோங்கும். இருந்த போதிலும் சில சில வீண் செலவுகள் மற்றும் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். கவனத்துடன் செயல்பட்டால் இவைகளைத் தவிர்க்கலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் உஷ்ணம் சம்மந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.  வீண் அலைச்சல் காணப்படும். வேண்டாத பேச்சுக்களால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமாகும். உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் ஏமாற்றங்கள் உண்டாகலாம். எனவே கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஆனாலும் வார இறுதியில் அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். லாபம் சுமாராக இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வழிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிஷ்ட திகதி : 5, 14, 23, 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பெண்களுடைய தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். ஆன்மீகத்தில் சிந்தனை மேலோங்கும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிக பண லாபம் கிடைக்கும். இவ்வாறாக இந்தவாரம் உங்களுக்கு மிக நன்றாகவே அமையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் தேடி வரும். எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தனித்தன்மையுடன் செயல்பட்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவர்.. வெளிநாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே அமையும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X