2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (03.03.2013 - 09.03.2013)

A.P.Mathan   / 2013 மார்ச் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (03.03.2013 - 09.03.2013)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
இந்தவாரம் ஏற்றம் தரும் வகையில் வருமானம் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள்.  பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்  காணப்படும். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும்.  உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள்  வெற்றியடையும். ஆனால் வார இறுதியில் தகுந்த ஓய்வும் தேவை. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும் எனவே வார இறுதியில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திகதி : 03
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)

சந்திராஷ்டமம்
மார்ச் 03ஆம் திகதி மாலை 04.16 மணியிலிருந்து மார்ச் 05ஆம் திகதி மாலை 07.25 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
இந்த வாரம்;. பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள். பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள் தொழிலில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.  எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

சந்திராஷ்டமம்
மார்ச் 05ஆம் திகதி மாலை 07.25 மணியிலிருந்து மார்ச் 07ஆம் திகதி காலை 10.13 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் நோய்கள் மூலம் தொந்தரவு காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உடலில் சிறு உபாதைகள் உண்டாகும்.  தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். இந்த வாரம் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

சந்திராஷ்டமம்
மார்ச் 07ஆம் திகதி காலை 10.13 மணியிலிருந்து மார்ச் 09ஆம் திகதி காலை 01.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. ஆனால் வார இறுதியில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.  பதவி  உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் மிகவும் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்மம் ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும். இல்லத்தில் செலவுகள் அதிகரிக்கும். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறும். நல்ல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆனால் வார இறுதியில் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்.



கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு முச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
இந்த வாரம் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்;லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்களுக்கு பெருமைகள் தேடி வரும் வாய்ப்புக்கள் உண்டாகும். நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையில்லாத பயங்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும். 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கம் பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். திடீர் பணப்பிரச்சினைகள் உண்டாகும். உடலில் அசௌகர்யம் தென்படலாம். மருத்துவ ஆலோசனை தேவை. செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். காரியங்கள் தடைப்படுதல்; மற்றும் சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும். ஆனால் வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட திகதி : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்.



தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும் . பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். வார இறுதியில் உஷ்ணம் சம்மந்;தமான பிரச்சனைகளில் அவதிப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். கடின பேச்சுக்களால் மனம் சஞ்சலமடையும். பொறுமையுடன் பேசுவது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
இந்த வாரம் இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி  உண்டாகும். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும.; வாரஇறுதியில் அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது. வீணான மன உழைச்சல்கள் காணப்படும். வீண் விவாதங்களே உண்டாகும் . எனவே பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். இந்த வாரம் உங்களுக்கு இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்.



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
இந்த வாரம் வேண்டாத பேச்சுக்களை தவிhப்பது நல்லது.  வியாபார சிக்கல்கள் உண்டாகும்.  சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும். முயற்ச்சி செய்யும் செயல்களில் சிறு சிறு  தவறுகள் காணப்படும்.  எதிர்;பார்த்த செய்திகள்  தோல்வியில் முடியும். வார இறுதியில் பெண்களுடைய தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குல தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும். நிகழ்ச்சிகள் நடத்துவதில் தடை உண்டாகி பின்பு விலகும். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
இந்த வாரம்  காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் செல்;வாக்கு கூடும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும். விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் தேடி வரும். எதிர்பார்த்த பணிமாற்றம் கிடைக்கப்பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு இனிமையாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .