2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (04.11.2012- 10.11.2012)

A.P.Mathan   / 2012 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (04.11.2012- 10.11.2012)

மேடம்
அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தன்னை சார்ந்தவர்களுடன். ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வகையில் சுப செய்திகள் வந்து சேரும். ஆனால் வார இறுதியில்  உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவார்கள்.  குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. எனவே இந்த வாரம் உங்களுக்கு சுமூகமாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி

இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் இடப ராசி அன்பர்களே
இந்த வார தொடக்கத்தில் வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். விருந்து மற்றும் உபசரிப்புக்களில் கலந்து கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.  பதவி  உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் காணப்படும். இருந்த போதிலும் வார இறுதியில் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலம் பாதிப்படையும்.  புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம்:  கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
இந்த வார தொடக்கத்தில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பண வரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.பணியின்  நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். ஆனால் வார இறுதியில் அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும்.பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி : 10
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்            
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)


கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
மென்மையான சுபவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை . முயற்ச்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.  புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் கை கால்களில் வலி உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும்  உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆக 9- பாதங்கள்.
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே..!
இந்த வாரம் நீங்கள் நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டாம் உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். மிக மகிழ்ச்சியாகவே இந்த வாரம் உங்களுக்கு செல்லும்.
அதிஷ்ட திகதி :  9
அதிஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
இந்த வாரம் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும்.  வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்;கள் கையெழுத்தாகும். பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும்.  எனவே இந்த வாரம்  உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆனாலும் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.  வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்ச்சி செய்வீர்கள். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். உடலில் வாயு சம்மந்தமாக சில தொந்தரவுகள் காணப்படும்.செலவுகள் கூடுதலாக இருக்கும் சிக்கனம் தேவை. அலைச்சலினால் உடலில் சிறிது அசவுகர்யம் காணப்படும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் வந்து நீங்கும்.  பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும்.  யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்.



விருட்ச்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே..!
இந்த வாரம் தொடக்கத்தில் உஷ்ணம் சம்மந்;தமான பிரச்சனைகளில் அவதிப்படுவீர்கள்.  ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் வார இறுதியில் ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும் . வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
இந்த வாரம் பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும்.அத்தோடு தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குல தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். லாபம் சுமாராக இருக்கும். அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும்.    எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும்;. எனவே இந்;த வாரம் மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

சந்திராஷ்டமம்
நவம்பர் 05ஆம் திகதி மாலை 01.11 மணியிலிருந்து நவம்பர் 07ஆம் திகதி மாலை 10.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
இந்த வாரம் நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் தடை உண்டாகி பின்பு விலகும்.வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்.  விரும்பிய இ;டமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

சந்திராஷ்டமம்
நவம்பர் 07ஆம் திகதி மாலை 10.50 மணியிலிருந்து நவம்பர் 09ஆம் திகதி காலை 04.39 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
எதற்க்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே...!
இந்த வாரம் ஆரம்பத்தில் நீங்கள் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆனாலும் வார இறுதியில் எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுப காரியங்களுக்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடைபெறும் . பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும். சில நல்ல நண்பர்களின்  சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

சந்திராஷ்டமம்
நவம்பர் 09ஆம் திகதி மாலை 04.39 மணியிலிருந்து நவம்பர் 12ஆம் திகதி காலை 06.49 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே...!
இந்த வாரம் ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதம் உண்டாதல்.  தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.  வேலையில் சில சிரமங்கள் காணப்படும். வியாபாரத்தில பிரச்சனை உண்டாகும். ஆனால் வார இறுதியில் புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X