2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (09.09.2012 - 15.09.2012)

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (09.09.2012 - 15.09.2012)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தூரப் பிரயாணங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குழந்தைகளுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாற்றுத் தொழிலில் இலாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுப்புக்கள் அதிகரிக்கும் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆனால் வார இறுதியில் மற்றவர்கள் உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காணப்படும். முக்கிய பணிக்காக தங்கள் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1 – 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். விருந்து மற்றும் உபசரிப்புக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களிடம் வீண் பேச்சுக்கு ஆளாகாமல் தங்கள் கடமையை செய்வது நன்மையைக் கொடுக்கும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரிக்கும். சொத்து பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். தொழில் ரகசியத்தை வெளியி;;டாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுமாராகவே செல்லும். யாரையும் நம்பி  ஏமாற வேண்டாம். இருந்த போதிலும் வார இறுதியில் இல்லத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வேண்டும். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். ஆரோக்கிய  விஷயத்தில் கவனம் தேவை. காரியங்கள் நடைபெற தாமதம். பணியில் இருப்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்;லது.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...!           

இந்த வாரம் உங்களுக்கு உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்; மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும்  துக்கமான சூழல் உருவாகும். பண தேவைகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. வார இறுதியில் மன பயம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகளுக்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம்; நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி செய்வோர் பெருத்த இலாபம் பெற்று மனம் மகிழச்சியடையலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் உரிய பரிசோதனைகள் மூலம் ஆரோக்கியம் பேணலாம். மற்றவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும். எதிர்பாராத திடீர் செலவுகள் காணப்படும். பெரியவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பெரியோர்களிடம் பணிவாக நடந்து கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் இலாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புது வாகன யோகம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் இலாபகரமாக அமையும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. பணம் தேவைக்கேற்ப வரும். மற்றவர்கள் மன வேதனையை தந்தாலும் அவர்களிடம் பொறுமையாய் நடக்கவும். வாடிக்கையாளர்களிடம் முன் கோபம் கொள்ளாமல் இருப்பது நலம். மேல் அதிகாரிகளுடன் எதிரிகளுடனும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். கடின உழைப்பால் இலாபம் கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல் மனதில்  உற்சாகம் பிறக்கும். பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். வெளியூர் பயணங்கள் அதிகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம், 1, 2, 3-ஆம் பாதங்கள்.

உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட துலா ராசி அன்பர்களே...!    

இந்த வாரம் அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு கூடும். கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும் நல்லவர்களின் சேர்க்கை சுகமான உணவு மனதளவில் அலைச்சல் ஆகியவை காணப்படும். ஆனால் மற்றவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பயணங்கள் பயனுடையதாக இருக்கும். பொழுது போக்குகளில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. இல்லத்தில் உள்ள பெண்கள் பெரியவர்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழிலில் சுமாரான போக்கே காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்ச்சிக ராசி அன்பர்களே...!                                 

இந்த வாரம் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். நீண்ட நாளைய  நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். பிரயாணம்  செல்லும் நிலை ஏற்படலாம். இதனால் இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகத்தில் சிந்தனை மேலோங்கும். அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லத்து சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதிகளில் ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி காலை 09.10 மணியிலிருந்து செப்டெம்பர் 11ஆம் திகதி மாலை  08.59 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம், ஆக 9-பாதங்கள்.

உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் குல தெய்வ வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மன பயம் நீங்கி மனோ பலம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.   எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும் அத்தோடு அவர்கள் தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள்;  இடமாற்ற முயற்சிகள் வெற்றி தரும். வார இறுதியில் பிறருடைய உதவி நாடும் நிலை உருவாகலாம்; வீண்மனஸ்தாபம் தோன்றும் உடலில்  உஷ்ணம் காணப்படும் .உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு தவிர
அதிஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 11ஆம் திகதி மாலை 08.59 மணியிலிருந்து செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 04.14 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள் புதிய தொழில் தொடங்குதல் வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே...! 

இந்த வாரம் இல்லத்தில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். தொழிலாளர்கள் பெருத்த லாபம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனம் மகிழ்ச்சியடையும். புதிய தொழில் தொடங்க ஏதுவான நாள். விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை
அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 04.14 மணிலிருந்து செப்டெம்பர் 16ஆம் திகதி காலை 08.10 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும் கும்ப ராசி அன்பர்களே...!

குடும்ப நண்பர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டு மங்களப் பொருள்கள் பெற்று மகிழ்வீர்கள். உற்சாகமாக செயல்பட்டு உயர்வான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். தாய் வழி உறவினரால் பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். பங்குச் சந்தைகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சுமாரான உறவுகள் காணப்படும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட தகிக: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

எல்லோரிடமும் நேர்மையுடன் பழகும் மீன ராசி அன்பர்களே...!

இந்த வாரம் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். சொத்தில் சங்கடங்கள் உண்டாகும். இ;டம் மாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணம் தேவைக்கேற்ப வரும். வியாபாரத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பங்குச் சந்தை இலாபம் தரும். கணவன் மனைவி உறவு சுமூகமாக செல்லும். பெண்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வார இறுதியில் ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .