2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இந்தவார பலன்கள் (14.09.2014 - 20.09.2014)

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (14.09.2014 - 20.09.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
மேன்மையான மேட ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். இழுபறியாக இருந்த வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தந்தையாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அநாவசியப் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு வாங்குவது விற்பது போன்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரம் சுமாராகவே இருக்கும். அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். எதிர்ப்புகளையும் கடந்து சாதிக்கும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
உண்மையையே பேசும் ரிஷப ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் தெளிவாக முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும்.  பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். உங்களின் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய நண்பர்களும் தேடி வந்து பேசுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
சாதனையாளர்களான மிதுன ராசி அன்பர்களே..! 
 
இந்தவாரம் மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாக பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். யாரையும் நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்;து செயல்படுவது நல்லது. திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
சுமைதாங்கிகளான கடக ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு மனை அமையும். அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் வந்து போகும். பண விஷயத்தில் கராறாக இருப்பது நல்லது. பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தாலும் பழைய பிரச்சனைகளாலும் குடும்பத்திற்குள் சண்டைகள் வரக்கூடும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியையும் தரவேண்டாம். பெண்களுக்கு பெற்றோர் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
பரபரப்பான சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்க வாய்புண்டு. கோவில் நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்துவீர்கள். பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். குடும்ப விடயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சகோதர வகையில் இருந்த மனத்தாங்கள் நீங்கும். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். பெண்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 18 
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பொறுமைசாலிகளான கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இழந்ததை மீண்டும் பெறுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்நின்று நடத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். அறிவுப்பூர்வமாக பேசி அனைவரையும் கவர்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தை விரிவுபடுத்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் வரும். தாயின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
கடின உழைப்பாளிகளான துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எதிலும் உங்கள் கை ஓங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புக்கள் வரும். புதிய வேலைகள் கிடைக்கும். கம்பீரமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பயணங்களால்; ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தோல்வி மனப்பான்மையி லிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெற்றோருக்கும் உங்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடிமாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அதிகாரிகளை குறைகூறாமல் இருப்பது நல்லது.  
 
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
சிந்தனையாளர்களான விருச்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மன இறுக்கம் நீங்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணங்கள் மாறும். மருத்துவ விசயங்களில் கவனமாக இருப்பது அவசியம். தடைபட்ட உயர்கல்வியைத்; தொடர்வீர்கள். வியாபாரத்தில் போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். புதியவர்களின் நட்பினால் உற்சாகமடைவீர்கள். அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை சொல்லி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 
 
அதிர்ஷ்ட திகதி : 14
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
வெள்ளை உள்ளம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேலைக்கு முயற்ச்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். இதுவரை இருந்து வந்த மனஇறுக்கங்களெல்லாம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடலில் சிறு சிறு காயங்கள் ஏற்படக்கூடும். நீண்டகால கனவுகள் நனவாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெண்களின் புதிய முயற்ச்சிகளுக்கு ஆதரவுகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்த வாய்ப்புக்கள் வந்து சேரும். 
 
அதிர்ஷ்ட திகதி : 15
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
நீதி நெறி தவறாத மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பத்தில் உங்களின் கை ஓங்கி இருக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பிதுர்;வழிசொத்துக்கள் கைக்கு வரும். மனைவியின் பிடிவாத குணம் தளரும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் வரும். சாதுர்யமான பேச்சால் சாதித்து விடுவீர்கள். ஆனால் வார இறுதியில் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். சில வகையில் வீணான அலைச்சல்கள்  உண்டாகும். எனவே அந்த வாரம் இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
செய்நன்றி மறவாத கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் உங்களுடைய அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக சொத்தை சிலர் விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அவ்வப்போது மனக்குழப்பங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். எந்த விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். உறவினர் நண்பர்கள் சிலர் உங்களின் உதவியை நாடுவார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். தோல்விகளால் மன இறுக்கம் உண்டாகும். உங்களின் புதிய திட்டங்களை அனைவரும் ஏற்பார்கள். நட்பு வட்டம் விரிவடையும். இனந்தெரியாத கவலைகள் மற்றும் வீண் டென்ஷன் வந்து நீங்கும். திருமண பேச்சுக்கள் நன்மையில் முடியும். புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வாரமிது. 
 
அதிர்ஷ்ட திகதி : 17
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .