2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (26.08.2012 - 01.09.2012)

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (26.08.2012 - 01.09.2012)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எடுக்கும் காரியத்தை எளிதாக செய்து முடிக்கும் வல்லமை பெற்ற மேட ராசி அன்பர்களே..!


இந்த வாரம் புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெறுவீர்கள். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும். பணியில் முன்னேற்றமான நிலை காணப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். ஆனால் வார இறுதியில் உணவு விடயத்தில் கட்டுப்பாடு, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும். பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். குழப்பங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதைச்செய்தாலும் அதில் சாதனைகளை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!


இந்த வாரம் தொடக்கத்தில் உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். ஆனால் வார இறுதியில் பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடி வரும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி


சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 26ஆம் திகதி காலை 09.04 மணியிலிருந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி மாலை 12.35 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களின் அன்புக்கு எளிதில் அடிமையாகும் மிதுனம் ராசி அன்பர்களே..!


இந்த வாரம் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும். சிலவகையில் வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். ஆனால் வார இறுதியில் உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 28ஆம் திகதி மாலை 12.35 மணியிலிருந்து ஓகஸ்ட் 30ஆம் திகதி மாலை 05.08 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதிலும் வேகத்தோடும் விவேகத்தோடும் செயல்படும் கடக ராசி அன்பர்களே..!


இந்த வாரம் தொடக்கத்தில் இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலைச்சல்கள் உண்டாகும். பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் மனக்கசப்புகள்  தோன்றும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காணப்படும். மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி


சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 30ஆம் திகதி மாலை 05.08 மணியிலிருந்து செப்டெம்பர் 01ஆம் திகதி மாலை 11.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எந்த காரியத்தையும் எளிதாகவும் தைரியமாகவும் முடிக்கும் வல்லமை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!


இந்த வார தொடக்கத்தில் உடன் பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.  ஆலய தரிசனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லத்தில் செலவுகள் அதிகரிக்கும். பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறும். பெண்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். கடின அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு காணப்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வளர்ச்சிக்கான விடயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது.

அதிர்ஷ்ட திகதி : 29
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)




உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளமில்லா உள்ளமும் கனிவாக பேசுகின்ற குணமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!


இந்த வாரம் வெளியூர் பிரயாணங்கள் ஒரளவு சாதகமாக அமையும். வயிற்றில் வலிகள் தோன்றி மறையும். பணியிடத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகலாம். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

பிறருடைய குணங்களை தெளிவாக எடைபோடக் கூடிய துலா ராசி அன்பர்களே..!


இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. ஆசிரியர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்டு நடப்பது நல்லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்களுக்கு பெருமைகள் தேடி வரும் வாய்ப்புக்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள்  வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்;. ஆனால் வார இறுதியில் பிறரிடம் உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

எந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருட்சிக ராசி அன்பர்களே..!


இந்த வாரம் நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் பிரச்சினை உண்டாகும். வேலையில் சில சிரமங்கள் காணப்படும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். தவிர்க்கமுடியாத சில பயணங்கள் உண்டாகும். பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம். ஆனால் வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)




மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் - பிறருக்கு உதவி செய்யும் நற்குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!


இந்த வாரம் இடமாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. சுப செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் நடைபெறும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும். எனவே இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி





உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!


இந்த வாரம் தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.  அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும். இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும்.  புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி  உண்டாகும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். மக்கள்  மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். ஆனால் வார இறுதியில்  எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் சூடு காரணமாக புண்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும் போராடி ஜெயிக்கும் குணம் கொண்ட கும்ப ராசி  அன்பர்களே..!


இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். நல்லவர்களின் சேர்;க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழி வகுக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். மனநிறைவான காரியங்களை செய்வீர்கள். சுப நிகழ்வுகள் உண்டாகும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். வார இறுதியில் முயற்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்;பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும். வேண்டாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார சிக்கல்கள் உண்டாகும். சிலரிடையே மனஸ்தாபங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் மீன ராசி அன்பர்களே..!


இந்த வாரம் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் செல்;வாக்கு கூடும். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள்  உண்டாகும். உறவினர்கள் வருகை உண்டாகும். மனம் அமைதியை விரும்பும். நீங்கள் மிகவும் நேசித்த பொருள் உங்களை தேடி வரும். வார இறுதியில் வீண் செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். பேச்சு, செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள்.

அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X