2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (24.11.2013 – 30.11.2013)

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                 இந்தவார பலன்கள்


மேஷம்


அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆக 9- பாதங்கள் தன்னை சார்ந்தவர்களுடன். ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பாக்ளே

இந்த வாரம் செய்யும் தொழிலில் மேலும் சில புதிய உக்திகளைச் செலுத்துவீர்கள். புதிய பணி வாய்ப்புக்கள் தேடி வரும். வரவுக்கேற்ற செலவுகள் காணப்படும். பொறுப்புக்கள் அதிகரிக்கும் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வேலைக்கு செல்பவர்கள்  முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.  மற்றவர்கள்  உதவியை  நம்பி  எந்த செயலிலும் இறங்க வேண்டாம். உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்து பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. வார இறுதியில் சில சங்கடங்கள் உண்டாகும்.

அதிஷ்ட தேதி : 28

அதிஷ்ட நிறம் : சிகப்பு, ஆரஞ்சு           

அதிஷ்ட தெய்வம் : சிவன் ( சூரியன் )

 

ரிஷபம்

கிருத்திகை 2,3,4,ரோகிணி, மிருகசீரிஷம் 1-2ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே

இந்த வாரம் ஆன்மீக காரியங்கள் செய்வதற்கு மனதில் ஆர்வம் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடின உழைப்பால் விற்பனை அதிகரிக்கும். சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக முடியும். புதிய முதலீடுகளுக்கான யோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழுகுவது நல்லது. இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்.  வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். விருந்து மற்றும் உபசரிப்புக்களில் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 24

அதிஷ்ட நிறம்:  வெள்ளைஇ வெளிர் மஞ்சள

அதிஷ்ட தெய்வம்: பெருமாள்.

மிதுனம்

மிருகசீரிஷம் 2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே          

இந்த வாரம் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். பண தேவைகள் அதிகமாக காணப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும். ஆனால் வார இறுதியில் அயல்தேசங்களிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் அவை தங்களுக்கு சாதகமாக அமையும். பணம் கைக்கு வந்து மனதை மகழ்ச்சியில் ஆழ்த்தும்.வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 26

அதிஷ்ட நிறம் : சாம்பல் நிறம்இ நீலம்

அதிஷ்ட தெய்வம்: நவகிரகம்.

 

கடகம்

புனர்பூசம் 4, பூசம் இஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள் மென்மையான சுபவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும்  உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே

இந்த வாரம் வேலை நெருக்கடியால் உடல் நலம் பாதிக்கப்படும். பண விடயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். வியாபார சம்மந்தமாக பயணங்கள் சோர்வுடையதாய் இருக்கும். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. இருந்த போதிலும் வார இறுதியில் மனதில் உற்சாகம் காணப்படும். நீண்ட  நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

 

அதிஷ்ட தேதி :25

அதிஷ்ட நிறம்:  வெள்ளைஇ வெளிர் மஞ்சள

அதிஷ்ட தெய்வம்: பெருமாள்.


சிம்மம்

மகம் இபூரம், உத்திரம் 1ம் பாதம் ஆக 9- பாதங்கள் யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே

இந்த வாரம் செய்யும் செயல்கள் வெற்றியைத் தழுவும் அயலாருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் . மேல்அதிகாரிகளுடன் எதிரிகளுடனும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். எதிர் பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகள் லாபகரமாக அமையும். பணம் தேவைக்கேற்ப வரும். நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 29

அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு

அதிஷ்ட தெய்வம் : பார்வதி

 

கன்னி

உத்திரம் 2,3,4அஸ்தம்  சித்திரை 12ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே

இந்த வாரம் தங்களது  உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். வீணான சிரமங்கள் தோன்றும்.நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். ஆனால் வார இறுதியில் கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர். வெண்மையான ஆடைஅணிதல் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல் மனதில் உற்சாகம் பிறக்கும் பணம் தேவைக்கேற்ப வரும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி : 27

அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு

அதிஷ்ட தெய்வம் : பார்வதி

 

துலாம்

சித்திரை 3,4சுவாதி, விசாகம்1,2,3-ம் பாதங்கள். தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே   

இந்த வாரம்  ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்ச்சி செய்வீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா வாய்ப்புக்கள் தேடி வரும். விருந்துகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி  உண்டாகும். இல்லத்தில் இளைய சகோதரர்களின் வரவினால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வது நல்லது. பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிஷ்ட தேதி :28

அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு

அதிஷ்ட தெய்வம் : பார்வதி

 

விருட்ச்சிகம்

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள் ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே எடுத்த காரியத்தை முடிக்ககூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே.              

இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.  கையில் இருக்கும் பணத்திற்கு தகுந்த செலவுகளை மேற்கொள்வது நல்லது.  ஏற்றுமதி இறக்குமதி களில் ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்  நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும்.

 

அதிஷ்ட தேதி : 23

அதிஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்

அதிஷ்ட தெய்வம் : பெருமாள்.

 

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆக 9- பாதங்கள். அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே

இந்த வாரம் மன பயம் நீங்கி மனோ பலம் அதிகரிக்கும். காரணமற்ற வெறுப்பும் சோர்வும் காணப்படும். எதிர்கால சிந்தனைகள் சற்று அதிகமாகவே காணப்டும்.  எதிர்பார்த்த உதவிகள் சற்று கால தாமதத்தை உண்டாக்கும். இடமாற்ற முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும். லாபம் சுமாராக இருக்கும். அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

 

அதிஷ்ட தேதி : 28

அதிஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள

அதிஷ்ட தெய்வம்: பெருமாள்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1,2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும்  மகர ராசி அன்பர்களே                                                                                                                                                          

 

இந்த வாரம் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி நிலைமையில் சற்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.  செயல்களில் சற்று நிதானம் அவசியம். மனம் சஞ்சலம் அடைதல். வேண்டாத பேச்சுக்கள் மற்றும் செலவுகனால் மன வேதனையடைதல். மேல் அதிகாரிகளுடன் எதிரிகளுடனும் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.

 

அதிஷ்ட தேதி : 26

அதிஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்

அதிஷ்ட தெய்வம்: பெருமாள்.

சந்திராஷ்டமம்:

 நவம்பர் 24 மணி 5.37  முற்பகலில் இல் இருந்து  நவம்பவர் 27 மணி 04.04  பிற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டீல் விருந்து உண்ணுதல, புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

கும்பம்

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள் .எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே.

இந்த வாரம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகப்பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.பெண்களினால் உதவி மற்றும் இன்பம் கிடைக்கும் . சில சந்திப்புக்கள் மனநிறைவைக்கொடுக்கும். புதிய அறிமுகங்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிஷ்ட தேதி : 28

அதிஷ்ட நிறம் : சிகப்பு, ஆரஞ்சு           

அதிஷ்ட தெய்வம் : சிவன் ( சூரியன் )

சந்தராஷ்டமம்:

 நவம்பர்  27மணி 4.04 பிற்பகலில் இருந்து  நவம்பர் 29 மணி 10.55  முற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டீல் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மீனம்

பூரட்டாதி 4, உத்திரட்டாதி,  ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள் தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே. 

இந்த வாரம் தெய்வீக பணிகளுக்கான செயல்களை எதிர்பார்க்கலாம். பண வரவுகள் தாமதப்பட்ட போதும் கிடைக்கப்பெறுவீர்கள். பெற்றோரின் உதவிகள் மிகுந்த பயனைத்தரும். இடம் மாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி  சுமூக உறவு காணப்படும்.  கணவன் மனைவி  உறவு  சுமூகமாக செல்லும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.


அதிஷ்ட தேதி : 27

 

அதிஷ்ட நிறம்:  கருப்பு தவிர

அதிஷ்ட தெய்வம்: பிரம்மா

 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 29மணி 10.55 முற்பகலில் இருந்து  நவம்பர்  01 மணி 02.00 பிற்பகல் வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டீல் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள் புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.

குறிப்பு: இந்த  வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X