Princiya Dixci / 2017 மே 09 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தப்பூமி பல யுகங்களைக் கண்டுவிட்டது. இக்காலப் பகுதியில் பல சக்கரவர்த்திகள், கல்வியில் மேலோங்கியவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிக வள்ளல்கள், இலக்கிய கர்த்தாக்கள் எனப் பல நூறாயிரங்களுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது நாமங்களை நிலைநாட்டிப் போயினர்.
காலத்தை வென்ற சாதனையாளர்களையே நாம் இன்னும் சொல்லிவருகின்றோம். மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், சேர் ஐசாக் நியூட்டன், மகா அலெக்ஸ்ஸாண்டர் என எண்ணற்றவர்களை நாம் உடனே சொல்லிவிட முடியாது.
எனினும், குறித்த இலக்கை நோக்கிச் சாதனை புரிந்தவர்கள் மட்டுமே, அத்தகைய உயரிய மேன்மைக்கு உரித்தாளர்களாவர். அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்களைச் சொல்லவும் முடியாது. அதிலும் கோடானு கோடிப் பேரில் ஒருவரே மேன்மையாளராகின்றார்.
சாதாரணமான மக்களின் பெயர்கள் மூன்று தலைமுறைக்குப் பின்னர் மறைந்துவிடும். இது இயற்கை. காலம் காலமாக பெயர் நிலைத்திருப்பதற்கு வேறு ஒருவரும் செய்யாத தனித்துவமான சாதனைகளை உருவாக்க வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 09/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .