Princiya Dixci / 2016 ஜூன் 16 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது தேகத்தின் ஆரோக்கியத்துக்கு, அளவான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவைத் திணித்து உடலுக்குள் புகுத்துவது, தேவையற்ற பிணிகளைத் தரும் எனத் தெரிந்தும் உட்கொள்வது, மனிதரின் எல்லையற்ற 'அவா' வினையே எடுத்துக் காட்டுகிறது.
பணம், பொருளைச் சேர்ப்பது போல், உடலின் எடையும் அதிகரிக்க விரும்புவது போல் அறியாமை வேறேது. உண்மை எதுவென அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இயங்குவதும் அறியாமையின் ஒரு வடிவம்தான்.
இந்த உடலும் மனமும் இணைந்தாலே சந்தோஷம் உண்டாகும். தேகம் நலிந்தால், மனம் துவண்டுவிடும். அப்புறம் ஏது நல்ல வாழ்க்கை உருவாகப் போகின்றதோ?
செல்வத்தால் பெறமுடியாத சந்தோஷங்களை தேக ஆரோக்கியம் ஈட்டித்தருகிறது.
அளவான உணவு, தூய எண்ணம் என்பன ஆன்மாவை அழகுபடுத்துகின்றன.
வாழ்வியல் தரிசனம் 16/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
கணேஷ் -கண்டி Monday, 20 June 2016 12:08 PM
சிந்திக்க தூண்டும் கருத்து....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .