Princiya Dixci / 2016 ஜூலை 05 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நின் செம்மஞ்சள் தேகத்தின் மீது, பஞ்சணை மலர்களைத் தூவிடினும் உன் மேனி கன்றி நோவெடுக்கும்.
வண்ணமயில் இறகுகொண்டு, மென்யுடன் விசிறினாலோ, தங்கத்தை வார்த்த உன் கன்னம் சற்றே நிறம் மாறும். சின்னக் காற்றுக்கும் அசைகின்ற பூச்செடி போல், உன் தளிர் மேனி.
குளிர் தென்றலுடன், பன்னீர், ரோஜா கொண்டு ஸ்பரித்தே அழகைக் சங்கரித்துக் கொண்டாய்.
நந்த வனத்தின் சொந்த மகளே, உன்மீது கொண்ட பிரேமையினை நீயறிவாய். என்னைத் துன்பம் தொலைக்கும் மனிதனாக மாற்றிவிடு.
இத்தகைய காதல் மொழிகளைப் பகன்ற தலைவன், பின்னர் பரத்தையர் பின் சுற்றிய கதைகளை முன்னர் எழுதிய இலக்கியக் கதைகளில் படித்துள்ளோம்.
இந்தப் பொய்யுரை மைந்தர்களின் பழக்கங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அன்னத்தை விட்டு ஆந்தை மேல் ஆசைகொள்ளுதல், ஆண்மைக்கே இழுக்கான அவமானம்.
வாழ்வியல் தரிசனம் 05/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .