2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அநாவசிய சொத்து செத்தபின் கிட்டாது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் செல்வத்தை முடக்கி, ஒளித்து வைத்திருப்பவர்கள் அதனால் உலகிற்கு ஏற்படும் இழப்புகளை உணர்ந்தும் தமது அடாத செயலை நிறுத்துவதில்லை.

ஏழேழு தலைமுறைக்கும் சொத்துக்களைக் குவிப்பதால் என்ன பயன்? தனது முன்னைய மூன்று தலைமுறைகளையே தெரியாத மனிதன், தனது இறப்பிற்குப் பின்னர் யாரோ, எவரோ அவர் கட்டிக்காத்த சொத்துக்களைப் பார்க்கப்போகிறார்களா? இல்லை, இந்த முட்டாள்த் தனங்களால் என்ன சந்தோசங்களை இப்பிறவியில் காணப்போகின்றார்கள்?

சொத்துக்களை முடக்கி ஒளித்து, அயல்நாடுகளில் யாரோ ஒருவர் பெயரில் அதனை வைப்புச் செய்வதால் அவர்கள் அதனை அனுபவிக்காமலேயே போய்விடுவர். அல்லது பிறரோ, வைப்பில் இட்ட நாடுகளோ வெகு சுலபமாகவே அந்தச் சொத்தைக் கவர்ந்து விடலாம். சொத்துக்களைத் தேவைக்கு அதிகமாக முடக்குவது தேசத்துரோகமாகும். கொள்ளையிடும் பாவத்திற்கு மேலானதாகும். அநாவசிய சொத்து செத்தபின் கிட்டாது.

வாழ்வியல் தரிசனம் 09/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .