2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அன்பாகப் பழகுவதால்...

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் நாடுகளில், மனிதர்களை விட நாய்களின் தொகைதான் அதிகமானது என ஓர் ஆய்வாளர் கூறினார். மேலும், இவற்றில் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட இனங்களும் உண்டு எனவும் கூறப்படுகின்றது.

மேலை நாட்டவர்களின் முக்கிய செல்லப் பிராணிகளில் முதலில் இடம்பிடிப்பது நாய்தான். அடுத்தது பூனை என்பதை நாம் அறிவோம்.

நாய் நன்றியுடையது மட்டுமன்றி, எஜமானைப் பாதுகாக்கும் அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது. இதனோடு, அன்பாகப் பழகுவதால் ஏற்படும் மகிழ்ச்சியில் தேகம் தெம்பு பெறுகின்றது.

ஆயினும், தக்க பராமரிப்பு ஆதரவின்றித் தெருவில் சுற்றித்திரியும் விசர் நாய்களினால் வருடாந்தம் பல நூற்றுக்கணக்காணவர்கள் மரணமடைவதும் உண்டு. 

அரசும் ஜீவகாருண்ணிய சங்கங்களும் இதுவிடயத்தில் கவனம் எடுக்க வேண்டும். வாழும் உரிமை சகல உயிர்களுக்கும் உண்டு.

வாழ்வியல் தரிசனம் 19/05/2016

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .