2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

அன்பை விதைப்பது இலகுவான ஒன்றுதான்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதில் கலவரம் உடையோர் பிறரையும் கலவரப் படுத்துகின்றார்கள். இதனைச் சிலர் தெரிந்தே செய்வதுண்டு.  

நான் கலங்கிப் போய் இருக்கின்றேன். ஏனையவர்கள் சும்மா சந்தோசமாக இருப்பதா? என்கின்ற அடாத எண்ண வலையில் புகுந்துஇ பலரைக் குழப்பிப் பந்தாடுவதனை நாங்கள் சதா கண்டு வருவதுண்டு.   

நல்ல நிலையில் இருக்கும்போதும் எவருக்கும் உதவி புரியாமல் இறுமாப்புடன் வாழுபவர்கள்இ தாங்கள் கெட்டு நொந்த பின்னரும் கூட, பிறரைப் பழிவாங்குவது சமூகத்தின் மீதான காழ்ப்பின் உச்சநிலைதான்!  

மனதின் கனிவை எவராலும் ஏற்படுத்த முடியும். அன்பை விதைப்பது இலகுவான ஒன்றுதான். ஒவ்வொருவரும் அதனை உளமார வரவேற்பீர்களாக! அன்பை ஸ்பரியுங்கள்! ஆயிரம் மலர்கள் உள்ளத்தில் மலரும்.  

வாழ்வியல் தரிசனம் 22/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X