2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அனைவருக்கும் ஆறுதல் ஊட்டுக

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்களுக்கு யாருமே இல்லை என எவருமே சொல்ல முடியாத ஒருநிலைமையை நாங்கள் அனைவரும் உருவாக்க வேண்டும். 

ஏழ்மை, நோய், போதிய அன்பு, அரவணைப்பு இல்லாமையினால் ஏங்கும் உயிர்கள் பலகோ​டி உளர்.

உங்களால், பணம், பொருள் உதவி நல்க இயலாது விடினும், தேறுதல் சொல்லிட நல்ல இதயம் உண்டு.

உலகம் பூராகவும் கஷ்ட்டப்பட்டு வாழ்கின்ற ஆதரவற்ற சிறார்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான பல தொண்டு நிறுவனங்கள், இல்லிடங்கள், ஆசிரமங்கள், புகலிடங்களை உருவாக்கியுள்ளன. 

சர்வதேசமெங்கும் தொண்டு நிறுவனங்களுடன் தனியார் அமைப்புகளும் உள்ளன. நீங்கள் அங்கு சென்று, ஏழைச் சிறார்களுக்கு, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேறுதலை ஊட்டுக. 

அதுவொன்றே, அவர்களின் ஏக்கங்களை, தனிமையை நீக்கி, மனதில் இனிமையைப் பொங்க வைக்கும். 

நாம் எல்லோரு​மே இரக்க சுபாவம் கொண்டவர்களே; அனைவருக்கும் ஆறுதல் ஊட்டுக.  

 

வாழ்வியல் தரிசனம் 17/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .