2025 ஜூலை 09, புதன்கிழமை

‘அனுபவ ஞானம் வாழும் முறையைக் கற்றுத்தரும்’

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவையும் உணர்வையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, பயன்படுத்துதல் வேண்டும். திருமண வீடொன்றுக்குச் செல்கின்றீர்கள். அங்கு நீங்கள் எல்லோரையும் போல, மகிழ்ச்சியுடன் கலந்துபேசிக் கொண்டாட வேண்டும். இதைவிடுத்து, மூளையை வேறு திசையில் திருப்பி, தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. 

மரணச் சடங்குக்குச் சென்றால், அங்குள்ள உறவினர்களுடன் உணர்வுபூர்வமாகத் துயரத்தைப் பகர்ந்து கொள்ள வேண்டும்.  

எங்கள் அறிவைச் செய் தொழிலில் மட்டுமல்ல, பிறருக்கு ஆலோசனை வழங்குதல், நூல்களைப் படித்தல் எனப் பலவழிகளில் பயன்படுத்த வேண்டும்.   

மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்பு செலுத்துதலுக்குக் கல்வி அறிவைப் பாவிக்க வேண்டியதில்லை. இவை இயல்பாக வரும் உணர்வுகள்.  

ஆனால் சில சமயங்களில் அறிவையும் உணர்வையும் இணைத்தும் பயன்படுத்த வேண்டும். அனுபவ ஞானம் வாழும் முறையைக் கற்றுத்தரும். 

வாழ்வியல் தரிசனம் 08/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .