2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

‘அன்பான இதயத்தை வதைத்தலாகாது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மிகவும் வலிந்து, உறவினர்களிடம் பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் எமது செய்கையைப் புறந்தள்ளுகிறார்களே” எனக் குமைபவர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். தூய அன்பைச் சேய்மையில் வைத்தலாகாது. 

தங்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளவே, கபட நாடகம் ஆடுவதாக, விசமத்தனமான எண்ணங்களை வைத்து, உறவுகளை உதறுபவர்கள் கறை படிந்த பிரகிருதிகளே. 

இன்னும் சிலர் அழகற்றவர்களை, பார்வைக்கு எளிமையானவர்களை தரங்குறைந்தவர்களாகவே கருதுவதுமுண்டு. 

மானசீகமான அன்பை, புரியாது விட்டால் நெஞ்சம் நைந்து சோர்ந்துவிடும். பெற்றதாய், தந்தைக்கு முதுமை வந்தால் அவர்களைச் சீண்டாத பிள்ளையாக உள்ளனர். ஆனால், பெற்றோர்களால் பிள்ளைகளை வெறுக்க முடிவதில்லை. தனிமையில்வாடும் பெற்றோர் ஏராளம். 

ஒருவரின் தன்மையறியாமல் உறவு பாராட்டக் கூடாது. இத்தகையோரின் உறவை, உரிமையுடன் கருதுவதால் பலத்த அவமானம் நேரலாம். அன்பான இதயத்தை வதைத்தலாகாது! வதைத்தலாகாது.  

   வாழ்வியல் தரிசனம் 02/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X