2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன்’

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல மனமும் பரந்த நோக்கமும் இல்லாதவன், தான் சார்ந்த மதத்துக்கோ அல்லது மனித இனத்துக்கோ விசுவாசமானவனாக இருக்க முடியாது. 

ஆனால், இத்தகைய வீணர்கள்தான், இன, மத குரோதத்தை வளர்த்து வருகின்றார்கள். அன்பு இல்லாதவன் உலகோடு இணையாதவன். இவர்களிடத்தில் எந்தவிதமான அனுகூலத்தையும் உலகம் பெற்றுவிடமுடியாது.

இதன்பொருட்டு, இத்தகையவர்களை நாங்கள் பூரணமாக விலக்கிவிடவும் கூடாது. சமூகப் பிணைப்புக்குள் இணைந்துகொள்ள, ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.  

எவரையும் ஒதுக்க நினைத்தலாகாது. வெறுப்பால் எதையும் சாதிக்கவும் முடியாது. சமூகப்பிரக்ஞையை உண்டுபண்ண வேண்டும். எவரையும் அரவணைக்க எம்மால் முடியும். கல்லுக்கு உள்ளேயும் நீர் மறைந்து ஓடும். பாறையைப் பிளக்க ஊற்று வருவதில்லையா? ஒரு மனிதனையும் தனித்திருக்க விடாதீர்கள். அவர்கள் எம்மவர்கள்தான். உணர்க! 

வாழ்வியல் தரிசனம் 13/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X