2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘அன்பை உட்புகுத்தினால் இதயம் ஈரமாகும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஞ்சத்தில் எண்ணங்கள் மிகையானால், ஆத்மாவின் ஏகாந்த நிலை கபளீகரமாகின்றது. 

நிர்வாணநிலை என்பது, வஸ்திரங்களைக் களைந்த நிலை ​அல்ல! மனதை நிர்மலமாக, ஆசைகளைத் தகர்த்து வைத்திருக்கும் நிலைதான் பரிபூரண நிர்வாணநிலையாகும்.  

தேகத்தை உடைகொண்டு மூடுவதுபோல், மனிதர்களில் பலர், உள்ளத்தையும் பூட்டிவைத்திருக்கிறார்கள். எனக்குத் திறந்த மனது என்று சொல்பவர்கள், அடுத்தவரின் அந்தரங்கங்களை மட்டும், விஸ்வரூபமாக்கி, நடுத்தெருவில் சத்தமிட்டுக் குரைக்கின்றார்கள். இரும்பு உருகினாலும் இவர்கள் மனம் உருகாது. சதா நெஞ்சை நஞ்சாக்கிய வண்ணமே வாழ்வார்கள். 

சுதந்திரமாக, ஏகாந்தமாக உன்னை ஆக்கு என ஞானிகள் பகர்வார்கள். அன்பை மட்டும் உட்புகுத்தினால் இதயம் ஈரமாகும். உலகம் ஏகாந்தமாகத் தெரியும். பார்வை விசாலமாகும்.  

     வாழ்வியல் தரிசனம் 24/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X