Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவரது மனதைக் கிண்டிக் கிளறி, உழுது அவரை இம்சைக்குள்ளாக்குவது அத்துமீறிய அநாகரிகமான காரியமாகும். ஓர் அடிமையைப் போல, கேள்விக்கு மேல் கேள்விகளைத் தொடுத்து, திக்குமுக்காடச் செய்வது, விருப்பமான சமூகப்பணிபோல் எண்ணும் பிரகிருதிகள் உள்ளனர். தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள இத்தகைய காரியங்களைச் செய்கின்றனர்.
ஒருவரது அந்தரங்கங்களை ஆராயும் உள்நோக்கத்துடன் இத்தகைய இழிகாரியங்களைச் செய்யும் நபர்கள், தங்களைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போல எண்ணுவது வேடிக்கை.
எல்லை மீறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பலவுண்டு. சீண்டினால் சண்டைதான் உண்டாகும். மனிதனின் இயல்பான அமைதியான குணங்களும் கூட, மூர்க்கத்தனமாகலாம். அப்பாவிகளின் கோபம் ஆபத்தானது.
எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளே வரவழைப்பதுதான் மானுட நேயத்துக்கு அழகு.
வாழ்வியல் தரிசனம் 11/06/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .