2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘அவனை அழிக்கிறேன் பார்’

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம்.  

உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். 

இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை.  

நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர்.  

போலியான ஒரு சந்தோசத்துக்காக எவரையும் நோகடிப்பது, அவ்வாறு பெற, எண்ணுதல் கண்ணியமானதல்ல;  

     வாழ்வியல் தரிசனம் 20/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X