2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘ஆசான்கள் ஆண்டவனிலும் பெரியவர்கள்’

Editorial   / 2017 நவம்பர் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசான்கள் ஆண்டவனிலும் பெரியவர்கள். ஆண்டவன் தனது பிரதிவிம்பத்தை இவர்களுக்கு அளித்தான். இதனாலேயே சிஷ்யர்களின் கல்விக் கண்கள் விரிந்து, ஒளியூட்டிய வண்ணமுள்ளது. 

 ஆசிரியர்களே ஒப்பற்ற மிகப்பெரிய விருதாக எமக்கு வழங்கப்பட்டுள்ளனர். மாணவர்களை உருவாக்கி வரும் இந்தச் சிருஷ்டி கர்த்தாக்கள் அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரங்கள். 

புதிய விடயங்களை நல்ல முறையில் கற்பிப்பதே நல் ஆசிரியர்களின் பொறுப்பான கடமையாகும்.  

இறைவனின் வலிமையை நாம் ஆசானூடாகத் தரிசிக்கின்றோம். எனவே, இவர்களே கடவுளின் பிரதிநிதிகளுமாகிறார்கள். 

தமக்குத் தெரிந்த அனைத்தையும் மாணவர்களுக்கு ஊட்டுவதால் சுயநலமற்ற பெரும் தியாகிகளும் இவர்களே. எமது அறிவுக் கண்ணைத் திறந்து, உலகைத் தரிசிக்க வைத்த, குருமார், சுத்தமான ஆத்மாக்கள்.   

     வாழ்வியல் தரிசனம் 07/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X