2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம்’

Editorial   / 2018 ஏப்ரல் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உபதேசங்களை, நல்லோர்கள் மூலம் கேட்க வேண்டும். ஆனால், போலிச் சுவாமிகள் கூடத் தங்களை ஞானிகள் என்று கூறுவதை, ஆமோதிக்கும் கூட்டம் பெருகி விட்டது. 

ஆன்மீகத்தை, அதன் தாற்பரியத்தைப் புரியாமல், இத்தகையவர்கள் உளறும் பேச்சுகளால் பலர், இன்று குழம்பிப் போய் இருக்கிறார்கள்.  

ஆன்மீக சிந்தனைகள் கற்கும் பொருள் அல்ல; மாறாக உண்மையை உணருவது என்பதை, உணராமல் இருப்பது கவலைக்குரியது.

தவறான நடிப்புகளுடன் கூடிய  பொய்மையான வார்த்தைகளைக் கேட்பதால், காலம் விரையமாகின்றது.மூளைக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது. 

ஒருவரின் நல்ல தேடல்களை, சிந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய ஞானிகளின் நூல்கள் இன்னும் இருக்கின்றன. இவற்றைத் தேடிப் படித்து உணராமல், காசைத் தேடும் சுவாமிகளிடம் எதைப் பெறமுடியும்? 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம். இதற்குப் பொய்யர்களின் உதவி எதற்கு?

வாழ்வியல் தரிசனம் 20/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .