2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இ​தயம் காற்றாகிக் கரைய வேண்டுமா?

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால வரையறைக்குட்பட்டு வாழுகின்ற நாம், அவற்றுக்கு அப்பால் எங்கள் அறிவுக்குப் புலப்படாத இறைவனை எப்படி உணர முடியும்? 

இந்த இறை சக்தியை எமது பக்தி மூலமே உணர முடியும். பக்தி கூட ஒரு வைராக்கிய சிந்தனையுடன் பிறப்பதாகும்.  

‘சர்வக்ஞனான’ எல்லாம் தெரிந்த ஈசன், எங்களது தேவைகளை உணர்ந்தவனுமாவான். எமது ஜென்மப் பிறவிப்பயனை அனுபவிக்க வைப்பவனும் இவன்தான். 

பக்தி, மனதைக் கசியச்செய்யும் தன்மையுடையது. மனத்தில் இறுக்கம் இருந்தால், பிறரிடம் மட்டுமல்ல, எந்த உயிரிடமும் இரக்கம் தோன்றாது. நெஞ்சம் மரத்த நிலையில் வாழ்க்கையே பிடிப்பு இல்லாமல் போய்விடும்.  

எனவே, நாம் எங்களை ஸ்திரப்படுத்த, ஒரு பலமான சக்தியிடம் லயிப்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும். அதற்கு உகந்த இடம் இறைவன் சந்நிதானம் ஆகும். இ​தயம் காற்றாகிக் கரைய வேண்டுமா? அங்கே செல்லுங்கள். 

     வாழ்வியல் தரிசனம் 19/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .