2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

‘இங்கிதம் இன்றி, மேலாதிக்கத்தை வெளிப்படுத்ததல் அறியாமை’

Editorial   / 2017 ஜூலை 26 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்துவக் கிறுக்கு உள்ளவர்களில் பலர் தனக்கு முன் உள்ளவர்களை, அறிவிலிகள் என எண்ணிவிடுகின்றனர். சில சமயங்கள் இந்த மமதையினால், பாமரனின் அனுபவத்திறனால், வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. 

இக்காலத்தில், சின்னஞ்சிறு பிள்ளைகள் முன் பெரியவர்கள் பேச அச்சப்படுகின்றனர். அவர்கள் எங்களைத் தங்கள் பேச்சுத் திறனால் மடக்கி விடுகின்றனர். தங்கள் கல்வி அறிவுக்கு நிகராகப் பேச எவருக்கும் அருகதை இல்லை எனப் பேசுபவர்கள், கல்வி அறிவின் பரிணாமத்தை, விஸ்வரூபத்தை உணராதவர்களாக இருக்கின்றார்கள். மிகவும் தெரிந்த, வயது முதிர்ந்தவர்கள் கூட, உலக யதார்த்தம் புரியாமல், இங்கிதம் இன்றி, தங்கள் மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துதல் அறியாமைதான்.  

அறிதல், தெளிதல் ஒருவருக்கு மட்டுமானது இல்லை.

   வாழ்வியல் தரிசனம் 26/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X