2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

இணையில்லாத் தோழி வேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

என் காதலியின் பிரதேசத்துக்குப் போனபோது, நான் காணாமல்போய் விடுகின்றேன். எனது வாலிபம் இவளது அன்பினால் கொள்ளையடிக்கப்படுகின்றது.

நான் கோ​ழையாய்ப் போனேனா? அல்லது இவள் பேரன்பைப் பெற்ற வீர​னாகி விட்டேனா எனத் தெரியவில்லை. மன்மதன் கூட காதலியின் முன், தன்னிலை மறந்து விடுவான்.

பெண்ணின் ஆளுமையினால் உருவான பிரேமையும் இவளால் பெற்ற புதுவித அனுபவங்களும் ​அநேகம். இவளிடம் மெல்லிய ஸ்பரிசத்தை சுவீகரித்தமையினால் நான் வலிமை பெற்றவனாகினேன். இந்த ஈர்ப்பு பாரிய விஸ்வரூப இன்பப் புயலை என்னுள் பிரவாகித்து விட்டமை அற்புதம்.

நான் ஒருத்தியிடம் திருட்டுப்போன ஆத்மாவாகி விட்டேனா என எண்ணுகையில் கணப்பொழுதும் மகிழ்ந்து போகின்றேன். வாழ்க்கைக்கு இணையில்லாத் தோழி வேண்டும். முதுமையிலும் என்னுடன் இணையவேண்டும்.

ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்காதுவிடின் அமைதியும் இன்பமும் வந்துவிடுமோ? தனித்து வாழுதல் சிரமம்தான். இதனால்த்தானே இல்லறத்தை உலகம் இயற்றியது.

இவ்வறம் உலகில் செழிக்குக.

வாழ்வியல் தரிசனம் 27/03/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X