Editorial / 2017 ஜூன் 23 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூது, விபசாரம் எல்லாமே, தற்போது பலநாடுகளில் சட்டப்படியாகச் செய்யலாம் என்கின்ற மோசமான நிலை உருவாகிவிட்டது.
முன்னர், காசுக்காகச் சீட்டாடியவர்களைக் கண்டால் பொலிஸார் உடனே கைது செய்து விடுவார்கள். ஆனால் இன்று, உலகம் பூராவும் விடுதிகளில் சீட்டாட்டம் பணம் வைத்து சூதாட்டமாக ஆடப்படுகிறது. நிலைமை இப்படியிருந்தால் சட்டம் என்றால் என்ன?
‘ரம்மி’ என்ற சீட்டாட்டம் தொலைக்காட்சியில் காசுக்காக ஆடும் முறைமைக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. மேலும், விபசாரிகள் தங்களுடன் தொடர்பு கொள்ளத் தொலைபேசி எண்ணை இணையத்தில் சாதாரணமாக விளம்பரப்படுத்தி விடுகின்றனர். இது எங்ஙனம் நடைபெறுகின்றது?
இதை நோக்கும்போது, கொள்ளை, திருட்டு, நிதிமோசடிகளை, ஏன் கொலையைக்கூட எப்படிச் செய்வது என்று வகுப்புகளை வைத்தே கற்றுக்கொடுத்து விடுவார்கள் போல் இருக்கின்றது. மக்கள் விழிப்படைய வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 23/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
15 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago