Editorial / 2017 நவம்பர் 14 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணமாகாத தங்கள் சகோதரிகளின் திருமணங்களுக்காகவும் சகோதரர்களின் கல்வி, வயது முதிர்ந்த பெற்றோர்களின் பொருட்டு, கண்டம் விட்டுக் கண்டம் சென்று, விழிகள் உறங்காமல், கடும் வெய்யில், குளிருடன் போராடி உழைக்கும் இளைஞர்களின் தியாகம் எரியும் தீயைவிட உக்கிரமானது.
அகதி வாழ்வு ஆதாரம் அற்றது. பொருள்தேடப் புறப்படும் எல்லோருக்குமே சாதகமான பயன் உடன்படுவதில்லை. ஆயினும், விடாமுயற்சியுடன் தொடரும் முயற்சிகள் தோற்றுப்போனதில்லை.
மிக ஆழமாகச் சிந்தித்தால், வாழ மிகப் பொருத்தமான இடம், நாம் பிறந்த மண்தான். புல்லர்களின் எல்லையில்லாத தொல்லைகளினால் புரட்டிப்போடப்பட்ட மக்கள், புடம்போட்ட தங்கமாகத் திரும்பவேண்டும். விட்டுவிட்டு ஓடினால், தேசம் கைப்பற்றப்பட்டு விடும். மண் மறக்கடிக்கப்பட்டுவிடும். தாய் மண்ணில் பிறந்தவன் தாய் மண்ணில்த்தான் வாழ வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 14/11/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025