2024 மே 03, வெள்ளிக்கிழமை

‘இளைய தலைமுறையினர் மயங்கிக் கிடக்கின்றனர்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறுகள், குற்றங்கள் செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படியானால், இன்றைய சூழலில், உலகில் பலகோடி மக்கள், சிறைக்கூடங்களில்த்தான் வாசம் செய்ய வேண்டிவரும்.  

எனவே, குற்றம் செய்யாத சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதே விடை தெரியாக வினாவாக உள்ளது. குற்றம் செய்யும் நபர்களே, நியாயம்தீர்க்கப் புறப்படுகின்றார்கள்.  

ஒழுக்கம் கெட்ட தனிமனிதர்களை ஆதரிக்க, ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கின்றது. மக்களை விழிப்பு நிலையில் இருப்பதைத் தவிர்ப்பதற்கு, மாயவலைகள் பின்னப்படுகின்றன. தவறான உபதேசங்கள், தப்பான ஆசைகளை விதைத்தல், எதையும் எப்படியும் செய்யலாம் என்ற மனநிலை நோக்கி நகர்த்திச் செல்ல, ஆத்ம துரோகிகள் செய்யும் காரியங்களில் இளைய தலைமுறையினர் மயங்கிக் கிடக்கின்றனர்.  

தர்ம சிந்தனை ஆத்மவிருத்திக்கான அறச் சிந்தனை​களை வலுக்கூட்டும். கனிவான இயல்பைக் காட்டுக; பொய்மையை வீழ்த்துக.  

வாழ்வியல் தரிசனம் 14/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .