2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

‘உங்களை நீங்களே உருவாக்க முனைக’

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 06:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

இதயத்தில் இனிமையை மட்டும் உட்புகுத்தினால் தகாதவை எவையும் அதில் புகுந்திட இடமேயில்லை. 

நல்ல கருமங்களை விருப்பத்துடன் செய்தால் அனைத்துக் காரியங்களும் உங்களுக்கு நன்மைதரும். 

இடர்கள், தடைகளை ஏற்படுத்தலாம். உடைபடா நெஞ்சுடன் உறுதியுடன் இயங்குவோருக்கு துன்பங்கள் விடைகொடுத்தோடும். 

மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து, உங்களுக்குள் விமர்சித்துத் தர்க்கிப்பதைத் தவிர்த்து, உங்களை நீங்களே உருவாக்க முனைப்புடன் முனைக. 

நடைபாதையில் எப்படி பராக்குப் பார்த்து நடக்கக் கூடாதோ, அவ்வண்ணமே வாழ்க்கைப் பாதையில், பார்வையை நேரிய திசையில் நிறுத்துக. 

பிறரின் உறுத்தலை, மிரட்டலை அருவெறுப்புடன் தூக்கி எறிக. நீங்கள் உங்களுக்கு மட்டுமானவர் அல்ல; உலகுக்குமானவர். 

     வாழ்வியல் தரிசனம் 30/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 1

  • siva Thursday, 30 November 2017 06:57 PM

    what a woderful words

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X