2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘உங்களை நீங்கள் சரிசெய்க’

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களைப் பிடிக்காதவர்கள், நீங்கள் சொல்லும் நல்லவைகளையும் கேட்கப் பிடிக்காமல் விலகிவிடுவார்கள்.  

நல்ல விடயங்களை எவர் சொன்னாலும், செவியில் ஏற்கப் பிரியப்படுங்கள் தோழர்களே! 

எதிரிக்கும் நல்ல மனம் இருக்கலாம். எல்லா எதிரிகளும் எல்லாச் சமயத்திலும் கெட்டவர்களாக இருப்பதுமில்லை.  

எனவே, அவர்கள் மனம் திருந்தி, மீள வந்தால் வெறுக்க வேண்டாம். சமானியமான நபர்களை ஏற்றுக்கொள்வதுபோல், ஏற்று நடப்பீர்களாக.  

மற்றவர்களையே எடைபோடும் நாம், எம்மை நாம் எடைபோடுகின்றோமா? 

எனவே, ஒருவரை வெறுக்கும்முன், உங்களை நீங்கள் சரிசெய்க. உங்களை நீங்கள் நீதிபதியாகக் கருதலாம். அதற்காக மற்றவர்களை எதிரியாகப் பார்ப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

     வாழ்வியல் தரிசனம் 17/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X