2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘உடன் கைப்பற்றிக் கொள்வீர்களாக’

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தெந்த நற்பண்புகள் எமக்கு வேண்டுமென மனதாரக் கருதுகின்றீர்களோ, அவற்றை உடன் கைப்பற்றிக் கொள்வீர்களாக! இதில் காலதாமதம் எதற்கு?

அதேசமயம் எவை, எவைகள் எல்லாம் துர்க்குணம் எனத் தெரிந்ததுமே, சற்றென அக்கணமே அடியோடி அகற்றிடுக.

மதுப்பழக்கம், புகைத்தல், பொறாமை,பொய்பேசுதல், பிறர்பொருள் மீது மோகம் கொள்வது போன்றவை கெட்ட குணம் எனத் தெரியாதா?

அதனை ஏன் பலரும் விட்டுவிட மனமின்றி, அந்தத் துன்பச் சுழலுக்குள்  இருக்கின்றார்கள்? என்ன சுகத்தை இதன் மூலம் பெறப்போகின்றார்களோ?

எமக்குப் பின்னர் பல தலைமுறைகள் உருவாகப்போகின்றன. இவர்களுக்கு நீங்கள் வழங்கும் வெகுமதிகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் தத்தமக்குள்  கேட்டுத் தெரிந்து கொள்வார்களாக.

விசங்களை வழங்குவதா? அமிர்தத்தைக் கொடுப்பதா? இலாப நட்டம் அவரவர் சிந்தையையும் செய்கையையும் பொறுத்ததே.  

வாழ்வியல் தரிசனம் 29/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X