2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க’

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான். கூடப்பிறந்தாலும் அல்லது உறவினர்களாக, நண்பர்களாக இருந்தாலும் வாழ்க்கையும் வாழும் முறைகளும் ஒரேமாதிரி அமைந்துவிடாது. 

இதில் நீயா, நானா என வாதிடுவதும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பேதம் புகழ்வதும் ஆகாது. ஏற்றம், இறக்கம் கொண்டதுதான் மனித வாழ்வு. எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்? எதையும் தீவிரமாக எதிர்பார்த்தால் ஏமாற்றங்களும் ஏற்படலாம்.  

எனக்கு மட்டும் ஏன் இப்படித் துயரம் வாட்டுகின்றது எனச் சொல்வது இயற்கையின் வலுப்பற்றி அறியாமல் இருப்பதுதான் காரணமாகின்றது. நல்லது நடந்தாலும் இறுமாப்புக் கொள்வது நிறை மாந்தர் இயல்பு அல்ல. 

கற்றவர்களுக்கு மட்டுமே உயர் பதவி கிடைப்பதுமில்லை. ஒன்றுமே தெரியாதவனும் கோடீஸ்வரன் ஆகின்றான். இதை விதி என்கின்றார்கள். மதி கூடத் தடுமாறுவதுண்டு. சலனமற்று இயங்குக; இயற்கை மாற்றங்களைப் புரிந்து கொள்க. உடையா நெஞ்சுடன் இயல்பாக வாழ்க. 

     வாழ்வியல் தரிசனம் 04/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .