2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘உணராத வாழ்வில் இனிமை இல்லை’

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுள் கிருபையின் சுகானுபவத்தை அடையாது திணரும் ஆன்மாக்கள், எதைச் செய்தாலும், பூரண திருப்தியைக் காணலாம் என்பதில் முனைப்பாக இருக்கின்றனர்.  

மோட்சத்தை அடைவதற்கு வழிதேடி, ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது, பூஜை புனக்காரங்களை மேற்கொள்வது, சாஸ்திரங்கள் பயில்வது என என்ன செய்தாலும், மனம் என்னவோ சாந்தி பெறவில்லையே எனப் பலரும் சொல்வதுண்டு.  

ஹே மனிதா! இறை அனுபவங்களை  அனுதினம் பெற்றாலும் கூட, அதைப் புரியாமல் அவஸ்தைப்படுகின்றாய்.  

உனது செயல் மூலம், கடவுளிடம் இருந்து பெறும் எல்லாமே அவன் மூலம் கிடைக்கும் இன்ப ஊற்றின் சிறுதுளி என ஏன் உணர்கின்றாய் இல்லையே?  

உனது குழப்பங்கள், சலனங்களை விலக்க, ‘இறை அனுபவங்களை உணரும் வல்லமை தா’ என அவரிடமே கேட்பாயாக. உணராத வாழ்வில் இனிமை இல்லை. 

     வாழ்வியல் தரிசனம் 08/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X