2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உதவியில் பணிவு...

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரின் முன் மிகையான பணிவுடன், குழைந்து நெளிந்து நிற்கும் போது, அதனைப் பார்த்தவருக்கு, சங்கடமாகவும் சில சமயம் எரிச்சலாகவும் இருக்கும்.

ஏதோவோர் உதவியைப் பெற்றுக்கொள்ள, நடிப்புடன் கூடிய பணிவு தங்களது நலன்சார்ந்ததாகவே இருக்கும்.

இத்தகைய நபர்கள், தாங்கள் எதிர்பார்த்த உதவியை நல்காவிடின், அவர்களைப் புறங்கூறியும் தூற்றியும் திரிவதுண்டு.

எவரிடமாவது பணிவுடன் கேட்பது தவறல்ல. ஆனால், முகஸ்துதி பாடி, சங்கோஜப்படுவது போல் செயற்கையாகத் தங்களை மாற்றிக் கொள்வதை எவருமே புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என எண்ணுதல் மடமை.

எல்லா நேரத்திலும் எல்லோரிடத்திலும் உதவிகேட்க முடியாது. கொடுப்பவரிடத்திலும் சில சமயம் சந்தர்ப்பமில்லாமல் இருக்கலாம்.

பொருளை ஏற்கும்போது காட்டும் பணிவை, அதனைத் திருப்பிக்கொடுக்கும் போதும் காட்டவேண்டும்.

வாழ்வியல் தரிசனம் 09/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .