Editorial / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில சமயங்களில், ஏற்படும் பெரும் துன்பங்களால், பாதிக்கப்பட்டவர் மனம் துடிக்கின்றது என்பார். அதேபோல், மிகப்பெரும் தாக்கத்தினால் ஏற்படும் அதிர்ச்சியில் உயிர் துடிக்கிறது என்று சிலர் சொல்துண்டு.
எனவே, உயிர் என்பதற்கு மனம் என்னும் ஓர் அர்த்தம் உண்டு. ஆனால், ஒருவர் இறந்து போனால், ஒரு மனது இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவது இல்லை.
இந்தத் தேகத்தை இயக்குவது உயிர். இது போன பின், உடல் வெறும் சடம்தான். உடலில் உயிர் இருந்தால் மட்டுமே எங்கள் மனமும் செயற்படுகின்றது.
நல்ல எண்ணங்களை, நற்கருமங்களை மட்டும் மனத்துக்குள் நிறுத்தினால் மட்டுமே, இந்த உயிர் சலனமற்று, நல்ல ஆத்மாவாக இருக்கும். ஆனால், பாவ எண்ணங்களின் சுமைகளை ஏற்றினால், உயிர் என்னும் ஆத்மா, தான் அவஸ்தைப்படுவதுடன், தேகத்தினால் செய்த பாவங்களையும் சுவீகரித்துவிடும். இதுதேவைதானா?
ஆன்மாவைச் சுத்தமாக வைத்திருத்தல் மானிடரின் பெரும் கடமையாகும். கடவுள் குடிபுகும் இதயத்தில் சுத்த சிந்தனையுடன் இயங்குக.
வாழ்வியல் தரிசனம் 14/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
11 minute ago
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
38 minute ago