Editorial / 2017 ஜூன் 12 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் என்பது சந்தோசகரமாகவும் சுதந்திரமாகவும் சமூகக் கட்டுப்பாடுகளைக் கௌரவித்து அறம்பல செய்யப் பிரதிக்கினை செய்யும் ஆண், பெண் என்னும் தலைவன், தலைவியின் பிணைப்பினை உலகத்துக்குக் காட்டும் ஆரம்ப நிகழ்ச்சியாகும்.
கணவன் மனைவியிடம் நீ பெரிது, நான் பெரிது எனும் தன்முனைப்பு, அதிகாரம், அகங்காரம் அற்ற அகத்தில் கருணை, பொறுமையுடனான உறவின் இறுக்கமே திருமணத்தின் பின்னரான சத்தியமான வாழ்க்கையாகும்.
இந்த இனிய இல்லறமாகாது, தார்மீக ரீதியில், ஒருவர் ஒருவரிடத்தில் வைத்திருக்கும் காதல், பரிவு, நம்பிக்கையே அவர்களின் சந்ததிக்கும் நல்ல செய்திகளை இட்டுச் செல்லவல்லது.
நல்ல பெற்றோரே நல்ல உலகைச் சிருஷ்டிக்கும் ஆற்றல்மிக்கோராவார். உறவின் இறுக்கம் உலகை உயர்த்தும்.
வாழ்வியல் தரிசனம் 12/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
12 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
39 minute ago