2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘உலகமே சிறை’

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கராக்கிரஹம்’ என்பது இருள் சூழ்ந்த சிறைவாசமாகும். ஆனால், இன்றைய சிறைகள் இருள்சூழ்ந்தவை அல்ல. முற்காலத்தில் சிறை வாழ்க்கை மிகவும் பயங்கரமாக இருந்தது.  

தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கடத்தி, சட்டவிரோதமாக  வனத்திலோ, பாழடைந்த வீட்டிலோ வைத்துச் சித்திரவதை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். காசுக்கார சமூகவிரோதிகளுக்கு சிறைவாழ்வு இராஜஉபசாரம். 

இதில் வேடிக்கையும் கோபப்படுவதற்குமான விடயம் யாதெனில், சிறைக்குச் செல்ல வேண்டிய நபர்கள், அப்பாவிச் சனங்களைக் கூண்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். பெருமைமிகு ஆன்மீக வள்ளல்கள், உலகமே சிறை எனக்கூறுவார்கள். மேலான வாழ்வே, இறைவன் எங்களுடன் வாழும் நிலையாகும்.  

இன்றும் என்றும் நற்சிந்தனையுடன் வாழ்ந்தாலே மாயச்சிறை என்னும் போலி உலகம் உடைபடும். உங்கள் உள்ளே புதுப்புவனம் உருவாகும். 

வாழ்வியல் தரிசனம் 12/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X