Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசை, அதிகாரம் செய்தால், அறிவு உறங்கிப் போகும். தன்நிலை உணராமல் ஆசையின் வலையில் வீழ்வது கேலிக்குரியதும் கூட.
முயற்சி செய்பவனுக்கே ஆசைப்படுகின்ற வல்லமையும் அதிகாரமும் உண்டு. நாங்கள் எதனை நோக்கிப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்காமல், கண்டதையும் நோக்கி அவாவுறுதல், தன்னைத்தான் ஏமாற்றுவதும் ஓர் ஏக்க நிலையையும் உருவாக்கிவிடும்.
இதனால் பெறப்படும் ஏமாற்றங்கள் மனநிலையில் பெரும்பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இந்தத் தொல்லைகள் எதற்கு? அதனை விட நியாயபூர்வமாக, அறிவின் துணைகொண்டு, மெய்வருந்தி உழைப்பதே மேலானதாகும்.
எதற்கும் ஏங்கித் துவழ்வதைவிட, சந்தோசமாகப் பணிசெய்தால் எந்தப் பிணிகளும் எமக்கு நேர்ந்து விடப்போவதில்லை. உழைக்கும் எண்ணத்துக்கு ஆசைகள்தான் அத்திபாரம் ஆகின்றன.
ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகளே நிறைவேறக் கூடியவைகளாக இருக்கும்.
வாழ்வியல் தரிசனம் 03/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .