Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் கொடுமையான விடயம் ஏழைகளுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அள்ளியள்ளிக் கொடுப்பதேயாகும். வசதியிருந்தால் எதையும் பேசலாம் என எண்ணி, நலிந்தோர் உதவி கேட்டால், அவர்களைத் துச்சமென எண்ணி, ஆசை வார்த்தைகளைப் பேசி, நம்பவைத்தல் இறைவனையே அவமானப்படுத்தல் போன்றதுதான்.
ஒருவரிடம் வேலை வாங்கக் காசைக் கொடுக்காமல், பொய்யான வார்த்தைகளைக் கொடுக்கும் ஏமாற்று வித்தகர்கள், போக்கிரிகள்.
உழைப்புக்குக் கௌரவம் கொடுப்பது மானுட தர்மம். ஒருவர் உழைப்பில் அவர்கள் குடும்பம் வாழ்கின்றது. சற்றேனும் சிந்திக்காமல் கொத்தடிமைகளாக புரியாத இடம், இனம் தெரியாத நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
பணத்தையும் உழைப்பையும் பிடுங்கி, பிணமாகவும் அனுப்பப்படுவது கொடுமை. எத்தர்கள் பேச்சால், அல்லலுறுகின்றனர் பாமரர்கள். தேகம் கெட்டுத் தேய்ந்து, சொந்த மண்ணின் தொடர்பைக் கழற்றி விடுவதை நிறுத்தப் போவது எப்போது?
வாழ்வியல் தரிசனம் 23/05/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .