2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

‘எண்ணங்களின் குழப்பம்; கண்ணீரின் பிரவாகம்’

Editorial   / 2018 மார்ச் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதின் வெப்பம் கண்ணீரின் பிரவாகம்; எண்ணங்களின் குழப்பம்; துன்பங்களோடு கூட்டுச்சேரும்.

அளாதவன் மனிதனேயல்ல; நான் அழுவதில்லை என்று சொல்வதும் அழகல்ல; வீம்புக்காக அழாமல் இருக்கலாம். துன்பங்களின் வடிகால் கண்ணீர்தான். இதனால் படிப்படியாகக் கவலைகள் கரையும்.

இரக்கம் கொள்பவர்கள் நெகிழ்ந்துபோகின்றார்கள். நெகிழ்ச்சி கோழைத்தனமல்ல; வீரனுக்கு நெஞ்சில் உரமும் உண்டு. இரக்கத்தின் வலிமையும் உண்டு.

அன்பின் அடிநாதம் இரக்கம் அல்லவா! உயிர்களுக்கு இரங்குபவன், அதன் துன்பங்களைக் கண்டு, மனம் குமைந்து போவான்.

இரக்கம் கொண்டவர்களுக்கு, உதவும் மனப்பான்மை உருவாகும். செயல்மூலம் காட்டி நிற்பர். பரிதாபம் காட்டுவார்கள். அவர்களின் கரங்களைப் பலப்படுத்துக. 

சந்தோசப்படுத்துதலே இன்பகரமானது.

அழுது முடித்ததும், உடன் எழுக!

வாழ்வியல் தரிசனம் 26/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X