2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எதிர்த்துப் போராடினால், பின்னடைவு புறந்தள்ளும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழிப்புலன் அபாரமானது. பார்வையால் உலகம் புரிகின்றது. விழிப்புலன்களை இழந்தவர்களுக்கோ, அவர்கள் கருமங்களே விழிகள் ஆகின்றன. விரல்களால் தொட்டு உணர்ந்தே கல்வி கற்கின்றனர். தங்கள் கைகளில் பிரம்பு போன்ற கருவியைப் பிடித்தவண்ணம், மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து செல்கின்றனர்.

சகல புலனறிவு உள்ளவர்கள்தான் அதிகமான விபத்துகளைச் சந்திக்கின்றனர். இவர்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து தங்களைத் தாங்களே விபத்துக்களை உண்டுபண்ணுகின்றனர்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்உணர்வும் அதீத அவதானமும் உண்டு. இது இறைவன் கொடுத்த வரம். இவர்களில் பலர் கல்வித்துறையில் எல்லையில்லா சாதனைகளையும் படைத்து வருகின்றனர். துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்த்துப் போராடினால், எங்கள் பின்னடைவு புறந்தள்ளும்.

வாழ்வியல் தரிசனம் 01/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .