2025 மே 12, திங்கட்கிழமை

‘எல்லோரிடமும் எதையும் பேசமுடியாது’

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த ஒரு விடயத்தையும் நாம் சொல்லும்போது, அதைக் கேட்பவர்கள் “அது சரியானதுதான்” என்று ஆமோதிப்பது சுலபமானது. ஆனால், அதே விடயத்தை ஒருவர், “தவறு” என்று சொன்னால், அதனை நிரூபிப்பது கடினமானது.

விதண்டாவாதம் புரிபவர்களிடம், பேசி வெல்லவே முடியாது. இத்தகையவர்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிரகிருதிகளே.

நாங்கள் சொல்லும் கருத்தை நிரூபிக்க, தகுந்த தகவல்களைத் திரட்டி, வழங்க வேண்டும்.

ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் வலியின் தாக்கம் அவருக்குத்தான் தெரியும்.

நெஞ்சத்தில் ஏற்படும் மனவேதனையை, அதைக் கரிசனையுடன் எல்லோரும் கேட்பது நடவாத விடயம்.

ஆனால், கருணையும் அன்பு உள்ளமும் கொண்டவர்களுக்கே, மற்றவர் துன்பம் தெரியும். எல்லோரிடமும் எதையும் பேசமுடியாது.

வாழ்வியல் தரிசனம் 18/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X