2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘எளிமை இழிவு அல்ல’

Editorial   / 2018 மார்ச் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் சோறும் சம்பலும் வயிராறச் சாப்பிட்ட பின்னர், அவரால் எந்த அமிர்தத்தையும் விரும்பி இரசித்து மீண்டும் உண்ண முடியாது.

வயிற்றின் கொள்ளளவுக்கு மேல் சாப்பிட முடியாது. நிறைந்த உறக்கத்தை ஏழை ஒருவன் பஞ்சுக்கட்டில் மூலம் பெறுவதில்லை. ஓலைப்பாயில் ஒய்யாரமாகத் தூங்குகின்றான். என்னதான் பானங்களைக் குடித்தாலும் தாகம் தீர்க்கத் தண்ணீர்போல் வருமா? 

எல்லாச் சொகுசு வாழ்க்கையும் மனிதன் தானாகவே திணித்துக் கொண்டதுதான். ஏழைகள் கூட இனிமையாக வாழ்கின்றார்கள். கஷ்டங்கள் வந்தாலும் சமாளித்துக் கொள்கின்றார்கள்.  

வெய்யிலும் மழையும் குளிரும் இயற்கையுடன் வாழ்பவனை ஒன்றும் செய்வதில்லை. குளிரூட்டப்பட்ட அறைக்குள் முடங்குபவர்களுக்கு ஏராளமான தொல்லைகள். வருந்தி தேகத்தை வதைக்கின்றார்கள். எளிமை இழிவு அல்ல; பணம் மட்டும் பெருமையும் அல்ல. 

வாழ்வியல் தரிசனம் 22/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .