2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘எளிமையே சந்தோசமான வாழ்க்கையைத் தரும்’

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எளிமையாக இருப்பதே சந்தோசமான வாழ்க்கையை அமைக்கும் என்று எண்ணுபவர்களுக்குச் சில சமயம் தன்னைச் சுற்றியிருக்கும் செல்வந்தர்களைக் கண்டால் மனம் சஞ்சலம் ஏற்படலாம். 

மனித சுபாவம் தனது நிலையில் நிரந்தரமாக இருக்க விரும்புவதும் இல்லை. ஆனால், எல்லோருமே இப்படிக் கருதுவதில்லை. இருப்பதே போதும் என்று இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். 

பரந்த உலகின் செழுமையையும் அதன் உற்பத்திகளையும் நவீன மயமாக்கலையும் கண்டு, அதன் ஈர்ப்பின் வலிமையில் சிக்கித்தவிப்பது சகஜம். இப்படியே போனால் வீடு, பாவனைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், எல்லாமே சடுதியாக மாற்றமடைந்து வருவதால், அவைகள் எல்லாவற்றின் மீதும் ஆசைப்பட்டால், அதன் முடிவுதான் என்ன? 

இன்று இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, பலருமே தங்கள் அலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, உடைகள் எல்லாவற்றையும் அடிக்கடி மாற்றிமாற்றி வாங்கிப் பணத்தை விரயம் செய்கின்றனர். இப்படியே இருந்தால் சேமிக்க முடியுமா? 

எளிமையை விரும்புபவர்களும் மற்றும் எல்லோருமே இவ்வண்ணம் பேராசைப்படுதல் ஏற்புடையதல்ல.

வாழ்வியல் தரிசனம் 03/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .