Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 22 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்கள் செயல்களின் தூய்மை மிளிர்ந்தால், அதன் பிரதிபயன் பன்மடங்காகி விடுகின்றது.
படித்த இளைஞரொருவர் சிறிய பலசரக்குக் கடையொன்றினை நடத்தி வந்தார். ஒரு நிறுவனத்திலிருந்து, பல பொருட்களை நிறுவன சிப்பந்திகள் இவரது கடைக்கும் வழங்கி வந்தனர். மேற்படி நிறுவனம், இவரது நேர்மையையும் கொடுக்கல் வாங்கல்களில் எவ்வித நிலுவைகளும் ஏற்படாததை அறிந்து, தமது விற்பனை முகாமையாளராக அமருமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆரம்பத்தில் மறுத்த இளைஞர், அவர்களின் வற்புறுத்தலின் பேரில், வர்த்தக விற்பனை முகாமையாளராகப் பதவியேற்றார். அவரது ஊக்கம், நேர்மை, நேர்த்தியான செயல்களால் பெரும் செல்வராகிவிட்டார்.
எமக்கான நல்ல வழியொன்றைத் திறக்க, ஆண்டவன் சித்தமாயுள்ளார். அதனை, நல்ல ஒழுக்கமான வாழ்வு முறையுடன், இணைத்துக் கொண்டால் அனைத்து வளமும் வந்து சேரும்.
வாழ்வியல் தரிசனம் 22/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago