2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குணநலன்களையும் தீரவிசாரிக்க வேண்டும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பும் அரவணைப்பும் பணிவும் அற்றவர்கள்அரசாங்க சேவையிலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ பணியாற்றத் தகுதியற்றவர்கள் ஆவார்.

குறிப்பாக வைத்தியசாலைகளில் அரச செயலகங்களில் பணிபுரிவோர் அகந்தையுடன் செயற்பட்டால்அங்குவரும் பொதுசனங்களின் நிலை என்னவாகும்?

வசதி படைத்தவர்கள் தமக்குரிய தேவைகளைத் தங்கள் பணத்திலேயே நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

ஆனால் பாமர, கல்வியறிவு குறைந்த ஏழை மக்கள் பொது நிறுவனங்கள், அரசாங்கத் திணைக்களங்களுக்குத் தமது தேவைகளை நிறைவேற்ற வருகையில் அவர்களை அன்புடன் வரவேற்று, புன்முறுவலுடன் உரியவாறு தங்கள் பணிகளைச் செய்வது தார்மீக கடமையாகும்.

ஒருவரை சேவைக்கு அமர்த்துமுன் கல்வித்தராதரத்தை மட்டுமல்ல, அவர்களின் குணநலன்களையும் தீரவிசாரிக்க வேண்டும். இப்படித் தற்போது விசாரணை நடைபெறுவதாகத் தெரியவில்லை.

வாழ்வியல் தரிசனம் 08/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .