2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

‘கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதையும் அறிவையும் முடக்கிவிடச் சிலர் குதர்க்கத்தை ஆயுதமாகக் கொள்கின்றார்கள். 

ஒருவரது சிந்தனை, தெளிவாக இருக்கும்போது, தேவையற்ற கருத்துகளை விதைத்துக் குழப்புவதே சிலருக்குச் சந்தோசகரமான பொழுதுபோக்காக இருக்கிறது. மக்கள் கூட்டத்தை, தங்களது குதர்க்க வாதத்தால் கலங்கடிக்கச் செய்வது, அரசியல்வாதிகளின் அசுர பலமாகிவிட்டது.

மதம், மொழி, இனபேதங்களை உருவாக்கி, அவர்களைச் சிந்திக்கவே விடாமல்ச் செய்யும் இந்தப் பாவ ஆத்மாக்கள், எதிர்கால உலகத்துக்காகச் செய்யும் அனர்த்தமானது சுனாமி, நிலஅதிர்வு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை விட மோசமானது. 

வெறும் வாயால், தீயனவற்றை மட்டும் உச்சரிக்கும், இழிவானோரைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது.  

   வாழ்வியல் தரிசனம் 29/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X