Editorial / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவை மேகம் இலேசாக மறைத்தாலும் அதனூடாக அது எம்மைத் தனது தண் ஒளியூடாகக் காட்டி நிற்பது அழகுதான்.
அதுபோலவே உன்விழியூடாக நாணம் திரையிடினும் என்னை கள்ளத்தனமாக நோக்குதலும் பேரழகு.
எவருக்கும் தெரியாமலே என்னை நீ ஊடுருவுதல் உனது பிரேமையின் உயிர்ப்பு அன்றோ. மௌனம் மிகு ஆழத்தை, அதன் அழுத்தத்தைப் புரிவேன் நான். ஜென்மாந்திரப் பிணைப்பு இது. காதலின் கண்ணியம் எமக்கேயானது.
வெட்கம் களைந்து, புற உலக பார்வை துறந்து, கட்டிப் பிடித்து முத்தம் பகர்வதுதான் முதன்மைக் காதல் என எண்ணும் நவ மாந்தர் காதல் யுகம் இன்று.
இதயப் பகர்வு இதமானது. தங்களுக்குள் பதியப்பட்டவை. தெருவோரத்தில் காட்டப்படும் திரைப்படக் காட்சி உண்மைக்காதல் அல்ல.
மேன்மை மிகு காதல் சாம்ராஜ்யத்தில் பேசப்படுவது காதலி, காதலனின் விழிகள் காட்டும் மௌன மொழி. நின் வழியினையே நான் தொடர்கின்றேன். ஆனால் இன்று நடப்பது என்ன?
காதல் களியாட்டமாக அரதங்கேற்றப்படுகின்றன. விகாரமாய் தேகத்தை தீயாக்கி, நெஞ்சத்தை நொருக்கிக் கொள்கின்றார்கள். காதலர்கள் காதலைக் கௌரவப்படுத்துவார்களாக.
வாழ்வியல் தரிசனம் 05/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025