2024 மே 17, வெள்ளிக்கிழமை

‘காதலின் பார்வை என்றும் வசீகரம்’

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உன் விழி மொழி அறியாதவன் நான் அல்லன். மொழி சுரக்க இதழும் நாவும் கூச்சப்பட அதை உணர்த்துவதே விழிகளின் அசைவுதான். நயனங்கள் திறம்படப் பேசும்.  

நின் உதடுகளுக்குச் சொந்தக்காரன்; எனவே என் பேச்சிலும் உன் குரல் கலந்து கவிபாடும்.

உனது நிழல்கூட முழு உருவமாய்த் தெரிகிறது. கைபேசியின் பதிவுகளைவிட, பல்லாயிரம் உன்விம்பங்களை என் நெஞ்சில் பொருத்தி, என்னை நான் அழகுபடுத்துகின்றேன். 

காதல் இலக்கியங்களைப் படிக்க, இஷ்டமில்லாமல் இருந்தவன், உன் கண்கள் அசைத்ததிலிருந்து கண்டுகொண்டேன் இந்த வலுவை. எல்லாமே பெற்ற திருப்தி எங்கிருந்து வந்தது? உன் பிரேமை என்னை முழுமையாக்கியது. 

நல்ல காதலி வல்லமை தருவாள். ஒளி இல்லாத வழியிலும் பத்திரமாக இட்டுச் செல்வாள். நீண்ட வழிப்பயணம். இந்த வாழ்க்கையில் வழுக்கல், சறுக்கல்கள் தானாகத் தேடி வரும். காதலி கரம் கரிசனையானால் செல்லும் பாதை வழிசமைத்து உலகைக் காட்டும். 

இளமைக்கு மட்டுமல்ல, முதுமைக்கே காதலின் தேவை அதிகமாகத் தேவைப்படுகின்றது. காதலின் கரிசனைப் பார்வை என்றும் வசீகரம். அன்பான காதலர்களுக்கு சந்தோசம் என்றும் நிரந்தரம். 

   வாழ்வியல் தரிசனம் 06/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .