2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘காதலும் காமமும் தவறாக சித்தரிக்கப்படுகின்றன’

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெட்டவர்களும் கெட்டுப்போக விரும்புவர்களும் வந்துபோகும் கூடாரங்கள், நகரங்களில் பலவுண்டு. இவர்கள், உள்ளத்தையும் உடலையும் அற்ப சந்தோஷங்களுக்காகக் கெடுத்துக் கொள்ளச் சித்தமாக இருப்பது வேதனைதான். 

காதலும் காமமும் தவறாகவே இங்கு சித்தரிக்கப்படுகின்றன. அவர்களின் தேவைகள், ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கழிக்கும் காலங்கள், அழுக்காகி விடுகின்றன. 

இந்த இலட்சணத்தில், தங்களை நாகரிகத்தின் உடைமையாளர்கள் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது வேடிக்கைதான். ‘அவனுக்கென்ன கொடுத்து வைத்தவன்’ என இத்தகையவர்களைப் பார்த்து, மனம் குமைபவர்கள் பலர் உள்ளனர். 

இந்தத் திரைப்பட நடிகருக்கு, எல்லாச் சந்தோஷங்களும் வலிந்து கிடைக்கின்றனவே என, ​அங்கலாய்ப்பவர்களை நீங்கள் பார்ப்பது உண்டு அல்லவா? 

ஒழுக்கத்தால் உருவாகும் பேரின்பம் நிரந்தரமானது. கறுப்பு வாழ்வு ஆபத்தானது.

வாழ்வியல் தரிசனம் 12/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .